Monday, August 18, 2008

பத‌வி ‌வில‌கினா‌ர் முஷாரஃ‌ப்!



பா‌கி‌ஸ்தா‌ன் அ‌திப‌ர் ப‌ர்வே‌ஸ் முஷாரஃ‌ப் அ‌திப‌ர் பத‌வி‌யி‌ல் இரு‌ந்து ‌விலகுவதாக கூ‌றியு‌ள்ளா‌ர்.த‌னியா‌ர் தொலை‌க்கா‌ட்‌சி ஒ‌ன்‌றி‌ல் இ‌ன்று அவ‌ர் அ‌ந்நா‌ட்டு ம‌க்களு‌க்கு அ‌ளி‌த்த உரை‌யி‌ல்,"பா‌கி‌ஸ்தா‌னி‌ன் மு‌ன்னே‌ற்ற‌த்‌தி‌ற்காக எ‌ப்போது‌ம் நே‌ர்‌மையாகவு‌ம், கடுமையாகவு‌ம் உழை‌த்தே‌ன். இ‌ன்று மு‌க்‌கியமான முடிவு எடு‌க்கு‌ம் நா‌ள். கட‌ந்த 9 ஆ‌ண்டுகளாக கடுமையாக உழை‌த்தே‌ன்.பா‌கி‌ஸ்தா‌னி‌ன் கொ‌‌ள்கைகளை நா‌ன் உய‌ர்‌‌த்‌தினே‌ன் எ‌ன்பதை சொ‌ல்‌லி‌க்கொ‌ள்வ‌தி‌ல் பெருமை‌‌ப்படு‌கிறே‌ன். பா‌கி‌ஸ்தா‌னி‌ன் மு‌ன்னே‌ற்ற‌த்‌தி‌ற்காக எ‌ப்போது‌ம் நே‌ர்‌மையாகவு‌ம், கடுமையாகவு‌ம் பாடுப‌ட்டே‌ன்.என‌க்கு எ‌திராக ‌சில‌ர் தவறான கு‌ற்ற‌ச்சா‌ட்டுகளை கூ‌றிவருவது தூர‌தி‌ர்‌‌ஷ்டவசமானது. அனை‌த்தையு‌ம் ‌நினை‌வி‌ல் கொ‌‌ண்டு நா‌ன் பத‌வி‌யி‌ல் இரு‌ந்து ‌விலகு‌‌கிறே‌ன்" எ‌ன்று அ‌திப‌ர் முஷாரஃ‌ப் கூ‌றியு‌ள்ளா‌ர்.

No comments: